இதனடிப்படையில்
இன்று பலராலும் பரவலாக பேசப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்ற சமூக இணையத்
தளங்களில் முக்கிய இடத்தைப் பிடிப்பது பேஸ்புக்காகும். இதன் மூலம் இன்றைய
தலைமுறையினரின் அதிகமான பொழுதுகள் கழிகின்றன. இதனால் உள்ளூரில் இருக்கும்
தெரியாதவர்கள் மட்டுமன்றி சர்வதேச ரீதியில் உள்ளவர்களுடனும் தொடர்புகள்
ஏற்படுகின்றன. அந்த தொடர்புகள் நல்லவையாக அமைந்தால் பாக்கியமே. ஆனால்
ஆயிரத்தில் ஒன்றே அப்படி அமைகின்றது. உலகில் வேறுபட்ட கலாசாரங்களை
பின்பற்றக்கூடிய நிலையில், அதனை எவ்வாறு எதிர்பார்க்க முடியும். பேஸ்புக்
மூலம் நல்ல தொடர்புகள் கிடைப்பது குறைவு என்றே சொல்லலாம்.
சாதாரணமாகிவிட்ட பொய்
பெரும்பாலும்
பேஸ்புக்கில் தனது உண்மையான விபரங்களை இடுவதை விட பொய்யான விபரங்களையே
அதிகமானவர்கள் குறிப்பிடுகின்றனர். பொய் ஒரு முஸ்லிமிடம் இருக்கக் கூடாத
பண்பு ஆனால் பேஸ்புக்கில் பொய் என்பது சர்வ சாதாரணமாக பேசப்பட்டு
வருகின்றது. அத்தோடு (செட்டிங்) அரட்டை மூலம் தனது நண்பர்களுடன் அதிகமாக
பொய்களை பகிர்ந்து கொள்கின்றனர். பொய்யாக ஆரம்பிக்கும் தொடர்புகள்
காலப்போக்கில் சிலருக்கு காதலாகவும் மாறிவிடுகிறது. இதனால் தற்கொலை
செய்யும் அளவுக்கு நிலமை செல்கின்றது. இலங்கையில் பேஸ்புக் மூலமாக காதல்
தொடர்பை ஏற்படுத்தி ஏமாற்றப்பட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று கடந்த
வருடம் வத்தளையில் இடம்பெற்றது.
உயிரைக் காவு கொண்ட பேஸ்புக்
பேஸ்புக்கில்
நண்பராக இருந்த இளைஞர் தன்னை விட்டுப் பிரிந்து சென்றகாரணத்தால்
மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று நேற்று பெங்களூரில்
இடம்பெற்றுள்ளது.

பேஸ்புக்கில்
நண்பராக இருந்த ஆண் நபரொருவர், அவரை விட்டு பிரிவதாகவும், இதன் மூலம்
தான் சுதந்திரமடைந்துவிட்டதாகவும் பேஸ்புக்கில் தனது கருத்தை பதிவு
செய்திருந்தார். இதனை பார்த்த அந்த மாணவி, தான் விரும்பிய நபர் தன்னை
கைவிட்ட சோகத்தில் இருந்துள்ளார். இதனால் அவர் கல்லூரிக்கும் செல்லாதிருந்த
நிலையில் தான் தங்கியிருந்த விடுதியறையிலேயே சுருக்கிட்டு தற்கொலை
செய்துகொண்டார்.
ஏமாற்றங்கள்
இது மட்டுமன்றி பல விதமான ஏமாற்று சம்பவங்களும் நடைபெறுகின்றன. ஆச்சரியப்படக்கூடிய கேவலமான சம்பவமொன்று அண்மையில் பிரித்தானியாவில்
இடம்பெற்றுள்ளது.
`ஒரு இளைஞன் யுவதி ஒருவருடன் தனது பொய்யான விபரங்களை கூறி பேஸ்புக்கின்
ஊடாக காதல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளான். அந்த யுவதியும் பொய்யான
விபரங்களையே குறிப்பிட்டுள்ளாள். இருவரும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்க
முற்பட்ட போது இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இது போன்ற விடயத்தை மையப்படுத்தி இலங்கையில் குருந் திரைப்படம் ஒன்றும்
உருவாக்கப்பட்டுள்ளது.
விபசாரம்-ஓரினச்சேர்க்கை; தூண்டப்படல்
முகம்
தெரியாது தன்னை அடையாளப்படுத்திகொள்ளாத பலர் அதிகமான அனாச்சாரங்களில்
ஈடுபடுகின்றனர். அத்தோடு விபச்சாரத்தின் பால் அதிகமானோரை தூண்டுகின்ற
முக்கிய இடமாக பேஸ்புக் திகழ்கிறது. கொழும்பில் உள்ள பல ஹோட்டல்களில் விலை
மாதுக்களும் இளைஞர்களும் அதனை செய்கின்றனர். சில பிரபல முஸ்லிம்
பாடசாலையின் பெயர்களை தமது சுயவிபரத்தில் குறிப்பிட்டு சிலர் இவ்வாறான
செயல்களில் ஈடுபடுகின்றனர். அத்தோடு ஓரினச்சேர்க்கையின் பாலும் அதிகமானோர்
அழைக்கப்படுகின்றனர். இந்த வலைக்குள் அதிகமான முஸ்லிம் இளைஞர்களும்
சிறுவர்களும் அகப்பட்டுள்ளனர். சிலர் முஸ்லிம்களுடைய பெயரில் இஸ்லாத்தை
கொச்சைப்படுத்த
இவ் இழிசெயலில் ஈடுபடுகின்றனர். இருப்பினும் எமது இஸ்லாமிய சகோதரர்கள்
பலர் இதற்கு துணை போகின்றனர். பேஸ்புக்கில் இணைந்துள்ள முஸ்லிம்
அறிஞர்களும் புத்திஜீவிகளும் இதனை தடுப்பதற்கான வழிகாட்டல்களை மேற்கொள்ள
வேண்டும்.
அச்சுறுத்தல்கள் பணமோசடிகள்
சிலர்
பேஸ்புக்கில் விளம்பர நோக்கத்திற்காக இணைகின்றனர். இதனால் அதிகமான
பணமோசடிகள் இடம்பெறுகின்றன. இலங்கையில் உள்ள பேஸ்புக் பாவனையாளர்கள்,
இணையத்தள அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர் என இலங்கை கணினி அவசர
சேவைக்குழு செய்தி வெளியிட்டிருந்தது. பேஸ்புக்கில் தமது முழுமையான
விபரங்களை இடுவதன் மூலமே அதிகமானோர் அச்சுறுத்தப்படுகின்றனர். மின்னஞ்சல்
முகவரிகளை அறிந்து அதனூடாகவே இவ்வாறான குற்றச்செயல்கள்
மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதே வேளை பேஸ்புக் மற்றும்
இணையத்தின் ஊடாக குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இரண்டு வருட சிறை
தண்டனை வழங்க சட்டத்தில் இடமுண்டு எனவும் இலங்கை கணினி அவசர சேவைக்குழு
தெரிவித்திருக்கின்றது.
நூற்றுக்கணக்கானோரின் கணக்குகள் முடக்கம்
இலங்கையைச்சேர்ந்த
நூற்றுக்கும் அதிகமானோரின் பேஸ்புக் கணக்குகள் இவ்வருட நடுப்பகுதியில்
முடக்கப்பட்டது. பேஸ்புக் ஊடாக பல குற்றச்செயல்கள் மற்றும்
துஷ்பிரயோகங்களிலும் ஈடுபட்டவர்கள் தொடர்பாக இலங்கை கணினி அவசர சேவைக்குழு
பேஸ்புக் நிறுவனத்திற்கு முறையிட்டதை அடுத்து இந்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டது.
இதே வேளை இலங்கையின் பேஸ்புக் பாவணையாளர்கள் தொடர்பாண விபரங்கயைும்
பேஸ்புக் நிறுவனம் தயார் நிலையில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிமையும் பேஸ்புக்கும்
ஒரு
சாரார் முழுமையான நேரத்தை பேஸ்புக்கில் கழித்து வருகின்றனர். இவ்வாறு
அதிகமாக பேஸ்புக் பாவிப்பவர்கள் பெரும்பாலும் ஏதோ ஒரு விதத்தில் தனிமைப்
படுத்தப்பட்டவர்களே என்றும் கூறலாம்.
முன்னர்
வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்பவர்கள் தான் வெளிநாட்டிற்கு சென்றதை
அறிவிக்க கடித்தை அனுப்புவார்கள். அது காலப்போக்கில் மாற்றமடைந்து
தொலைபேசிக்கு முன்னேறியது. தற்போது பேஸ்புக்கும் ஸ்கைபும் தான்
வெளிநாட்டில் உள்ளவர்கள் தொடர்புகளைப் பேண அதிகமாக பாவிக்கின்றனர். அதனால்
பல செலவுகள் குறைவடைகின்றன. இருந்தாலும் அவர்கள் அங்குள்ள தனிமைக்கு
தொடர்ந்து பேஸ்புக் பாவிப்பதனால் அநாவசியத் தொடர்புகள் ஏற்படுகின்றன.
பார்ப்போர் கேட்போர் இன்மையால் அவர்கள் தான் தோன்றித் தனமாக செயற்படும்
வாய்ப்புக்களும் இருக்கின்றன.
பெற்றோரின் எதிர்பார்ப்பும் பிள்ளைகளின் செயற்பாடும்
அதிகமாக
பெற்றோர்கள் ஊர் கெட்டுவிட்டது என்பதற்காக தமது பிள்ளைகள் வெளியே
செல்லாதிருக்க அவர்கள் எதிர்பார்க்கும் ஆசைகளை நிறைவேற்றுகின்றனர்.
பிள்ளைகளின் ஆசையாக தற்போது கணினியும் கையடக்கத் தொலைபேசியுமே இருக்கின்றன.
பெற்றோர் கணினியுடன் இணைய வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றனர்.
இதனாலேயே அதிகமான பிள்ளைகள் பேஸ்புக்கில் இணைகின்றனர்.
கணினி
இணைய வசதிகள் அவசியப்பட்ட காலமும் கடந்துவிட்டது. இப்போது உலகை வலம்
வருவதற்கு திரீ ஜீ வசதியுள்ள கையடக்கத் தொலைபேசியொன்றே போதும். இலங்கையில்
உள்ள அணைத்து கையடக்கத் தொலைபேசி சேவை வழங்குனர்களும் இணையப் பாவணைக்கு பல
சலுகைகள் வழங்குவதன் மூலம் அதிகமானவர்கள் இலவசமாக இணையத்தில் உலா
வருகின்றனர்.
எனவே
தமது பிள்ளைகளுக்கு கணனியையும் கையடக்கத் தொலைபேசிகளையும் வாங்கிக்
கொடுத்தால் போதாது அவர்கள் அதனூடாக என்ன செய்கின்றனர் என அவதானிக்க
வேண்டும். பெற்றோர்களும் இணைய அறிவை வளர்த்துக் கொண்டு தமது பிள்ளைகளுக்கு
வழிகாட்ட வேண்டும். பிள்ளைகளும் பெற்றோர் நம் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு
ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் நல்லவர்கள் தான் ஆனால் பேஸ்புக்
மூலமாக கிடைக்கும் நண்பர்கள் எப்படியிருப்பார்கள் என்று உங்களுக்கே
தெரியாமல் இருக்கும். அவர்களின் தீயசெயல்கள் காலப்போக்கில் உங்களில்
பிரதிபலிக்கும்.
மஹரம் மறந்த நிலை
இதேவேளை
இன்று ஆண் பெண் வித்தியாசமின்றி பேஸ்புக்கில் நண்பர்களாக பழகுகின்றனர்.
இந்த சந்தர்ப்பத்தில் இஸ்லாம் வரையறுத்துள்ள மஹரம் முற்றாக
நிராகரிக்கப்படுகின்றது. திருமணம் செய்துள்ள ஆண்களும் யுவதிகளுடன்
தொடர்புகளை வைத்துக்கொள்கின்றனர். இதனால் குடும்பத்தில் பல பிரச்சினைகள்
ஏற்படுகின்றது. அத்தோடு திருமணம் முடித்த பெண்களும் இவ்வாறான
செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். அன்மையில் ஒருவர் எனது நண்பரை
தொடர்புகொண்டு அவர் சார்ந்த பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் யுவதி பற்றி
கூறியுள்ளார். அந்த யுவதி நிச்சயிக்கபட்ட போதும் அந்த நபருடன் நெருக்கமாக
பழக முற்படுகின்றார். இதனை அவர் கவலையுடன் தெரிவித்தார்.

மத விடயங்களை கூட வீணாக விவாதித்து மார்க்கத்தை கொச்சைப்படுத்தும் செயல்கள் பேஸ்புக்கில் தாராளமாக இடம்பெறுகின்றன.
உள ரீதியான பாதிப்பு
இணையம்
பாவிப்பவர்கள் அதிகமாக மனரீதியாக பாதிக்கப்படுவதாக ஆய்வொண்று
தெரிவிக்கின்றது. அந்த ஆய்வின் படி 30 வீதமானவர்கள் (இன்டநெட் கேம்) இணைய
விளையாட்டுக்களில் ஈடுபடுபவர்களும் 42 வீதமானோர் சமூக வலைத்தளங்கள்
பாவிப்பவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. இதே வேளை மன ரீதியாக
பாதிக்கப்பட்டிருக்கும் சமூக வலைத்தளங்கள் பாவிப்பவர்களில் 65 வீதமானவர்கள்
பேஸ் புக் பாவிப்பவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அண்மையில் பிரிதானியாவை
சேர்ந்த கணனி ஆசிரியர் ஒருவர் தொடர்ச்சியாக இன்டர் நெட் விடியோ கேம்
விளையாடியதனால் உயிரிழந்துள்ளார்.
பேஸ்புக் புரட்சி
பேஸ்புக்
பாவிப்பதன் மூலம் விபரீதமான விளைவுகள் ஏற்படுவதைபோல் நன்மையான விடயங்களும்
இருக்கத்தான் செய்கின்றன. இன்று அரபுலகம் மறுமலர்ச்சி பெறுவதற்கு பேஸ்புக்
முதற் காரணியாக இருந்துள்ளது. எகிப்தின் இஸ்லாமிய மலர்ச்சியை தொடர்ந்து பல
இஸ்லாமிய நாடுகளிலும் மறு மலர்ச்சிக்கான போராட்டங்கள் இடம்பெற்று
வருகின்றன. இதனால் இன்று பேஸ்புக் அதிகமான வரவேற்பை பெற்று வருகின்றது.
தஃவாப் பணி
அத்தோடு
இஸ்லாத்துக்கு எதிரான சதிகள் பேஸ்புக் மூலமாக மேற்கொள்ளப்படுகிறன. அதற்கு
பதிலடி வழங்கும் இஸ்லாமிய சக்திகளும் பேஸ்புக்கில் இருக்கின்றன. அவை சிறந்த
முறையில் இஸ்லாமிய பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. இன்றைய இஸ்லாமிய
பிரபலங்கள் கூட பேஸ்புக்கில் தமக்கான குழுக்களை ஆரம்பிக்கின்றனர். இதனூடாக
சிறந்த முறையில் மார்க்கப்பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதிகமான
அந்நியர்களும் இதனூடாக இஸ்லாத்தை பற்றி அறிந்துகொள்ளக் கூடிய வாய்ப்புக்கள்
ஏற்படுகின்றது.
மாற்றீடு
பேஸ்புக்
இணையத்தளம் மூலம் நபிகளாரை அவமதித்து பிரசாரங்கள் நடைபெறுவதால் இதற்கு
பதிலாக கடந்த வருட இறுதியில் பாகிஸ்தான் இளைஞர்களால் `மில்லத் பேஸ்புக்’
எனும் சமூக வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டு இஸ்லாமிய உலகில் வரவேற்பை பெற்றது.
ஆரம்ப ஐந்து நாட்களுக்குள் 20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இணைந்தனர்.

எனினும்
இன்று பேஸ்புக் கண்டுள்ள அதீத வளர்ச்சியினால் நமது சமூகம் அதன் பாலும்
ஈர்க்கப்படுகின்றது. ஏனைய ஊடகத்துறைகள் பாரிய வளர்ச்சி கண்டுள்ள போது
இளைஞர்கள் பேஸ்புக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆதலால்
அவர்களுக்கு கொடுக்க வேண்டிய தகவல்களையும் அவர்களுக்கான தஃவா பணியையும்
பேஸ்புக் ஊடாகவே வழங்க வேண்டியுள்ளது. அதேவேளை எந்த விடயத்தையும்
பிரபலப்படுத்த பேஸ்புக் பயன்படுத்தப்படுகிறது.
இன்றைய
இளைஞர்கள் பாலையும் நீரையும் வேறாக்கி குடிக்கும் அன்னத்தைப் போன்று
இருக்க வேண்டும். பேஸ்புக்கில் நல்லதும் தீயதும் இருக்கின்றன அவற்றில்
தீயதை தவிர்த்து அதனூடாக அடைய முடியுமான நல்ல பயனையும் அடைந்து கொள்ள
முற்பட வேண்டும். அத்தோடு இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு உட்பட்ட வகையிலும்
முஸ்லிம்களின் தனித்துவத்தை பேணும் வகையிலும் நடந்துகொள்ள வேண்டும்.
Comments[ 0 ]
Post a Comment