அல் குர்ஆன் வழி நடந்தால் வெற்றி நமதே
Thursday, August 8, 2013
நாம் போட்டி
நிறைந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ‘எதையும் சாதிக்க வேண்டும்,
அதிலும் வேகமாக சாதிக்க வேண்டும்’ என்ற வெறியை இந்த போட்டி உலகம் நமக்கு
ஏற்படுத்தியுள்ளது.
‘மற்றவர்களை விட
நாம் எப்போதும் ஒரு அடி முன்னே இருக்க வேண்டும்’ என்ற வேட்கைதான் தற்போது
அனைவரின் மனதிலும் குடிகொண்டுள்ளது. ‘ஒரு நிமிடம் பிந்தினால் கூட நாம்
தோற்று விடுவோம்’ என்ற எண்ணத்தை அனைவரின் மனதிலும் இந்த போட்டி
விதைத்துள்ளது.
‘போட்டிகள் இருக்க வேண்டும், வெற்றி
அடைய வேண்டும், சாதிக்க வேண்டும்’ என்ற வேட்கை அனைவரிடமும் இருக்க வேண்டும்
என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் இந்த வெற்றியை
‘எப்படி வேண்டுமென்றாலும்’ அடைந்து கொள்ளலாம் என்ற தவறான எண்ணத்தையும் இந்த
போட்டி ஏற்படுத்தியுள்ளது.
நாம் எந்த விடயத்தை செய்வதென்றாலும்
இஸ்லாமிய வரையறைகளை மீறக் கூடாது. ஆகவே அல் குர்ஆன் கூறும் வழியை பின்பற்ற
வேண்டும். அத்தோடு ஸுன்னாவின் படி நடந்தால் இம்மையிலும் மறுமையிலும் நாமே
வெற்றியாளர்களாக திகழ்வோம்.
அல்குர்ஆன் வழி நடப்போம் வெற்றியாளராவோம்.
Tags:
இஸ்லாமிய கட்டுரை
Comments[ 0 ]
Post a Comment