இதுவரை நாம் கல்வி எனும் ஏறுவரிசையை தேடியலைந்து தற்போது தான் அதன் முதல் படியில் காலடிவைத்துள்ளோம் . இதுவரை கல்வி என்றால் என்னவென்பதையும் , அதன் வகைகளையும் வகுத்தறிந்தோம் , இனிதான் விரிவான விளக்கமான குறிப்பிட்ட ஒரு குறிக்கோளை மையமாக வைத்த விரிவுரைகளை பெறப்போகின்றோம் . இங்கே நாம் எமக்கும் எம் சமூகத்துக்கும் எம் தேசத்துக்கும் குறிப்பாக எம்மை பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கும் பயன் படக்கூடிய ஒரு கல்வித்துறையை தெரிவுசெய்துக் கொள்வது மிகவும் சிறந்தது .
அன்றி , நான் நாளும் தெரிந்தவன் A to Z படித்தவன் , நானே பெரியவன் , வீட்டில் தலைவன் , பெற்றோர் என்ன மண்ணாங்கட்டி அ , ஆ தெரியாதவங்க , எனக்கு கட்டாயம் கையடக்கதொலைபேசி , லப் டொப் , பேஸ் புக் தொடர்புகள் தேவை , நான் நாலுபேருக்கு முன்னால மரியாதையாக நடந்துக்கணும் , இப்படியான தற்பெருமையும் தலைக்கனமும் இரண்டறக்கலந்த ஒரு மனோவியாதி எம்மில் அநேகமானோரை தொற்றிக்கொள்கின்றது , இதனால் பால் மணம் மாறாத பசுந்தளிர்களின் , செங்கமலத்தையொத்த செல்லச்சிரார்களின் , வெள்ளை ரோஜாக்களையொத்த முதிர்ச்சியடையாத கபடமறியாத ரோமியோக்களின் எதிர்காலமும் பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்களும் வெறும் சூன்யமாகி இளவு காத்த கிளியின் கதையே ஆகின்றது .
ஒளிமயமான எதிர்காலத்துக்கான விளைமதிக்க முடியாத விளைவித்துக்களே ! முத்துக்களே ! காலம் பொன்னானது . ஆம் நாம் முதலில் ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப் பிடித்துக் கொண்டு பெற்றோரின் நல்லாசிகளுடன் ஆசிரியர்களின் அறிவுரைகளையும் பக்தர்களின் போதனைகளையும் ஏற்றுக்கொண்டு கல்வியறிவை கசடரக்கற்று த்ளிவுபெற்று , ஆராய்ச்சித்துறைகளிலும் , அபிவிருத்தியிலும் ஆளுமையிலும் பங்கெடுத்து வெற்றிக்கொடியேந்தி வீறு நடைபோட எனது நல்லாசிகள் .
இத்தனைக்கும் முதலில் எம்மிடமுள்ள சோம்பேறித்தனமும் தலைக்கனமும் , பிடிவாதக் குணங்களும் அகல வேண்டும் ஒழுக்கமும் விடாமுயற்சியும் பொறுமையும் , பணிவான பண்பும் , கிரகிக்கும் மனப்பாண்மையும் உள்வாங்கப்பட வேண்டும் , விசேடமாக தகவல் தொழில்நுட்பத் துறையானது தேவைக்காகவும் பிரயோகிக்கப்பட வேண்டும் , வாசிப்புப்பழக்கம் கடைபிடிக்கப்பட வேண்டும் . “முயற்சியுடையார் இகழ்ச்சிஅடையார் “
சீனா , ஜப்பான் , இந்தியா முதலான நாடுகள் இன்று உலகின் முதலாம் இரண்டாம் வல்லரசுகளை மிஞ்சி விடுவதற்கான பிரதான காரணம் வாளிபச்மூகத்தின் விடாமுயற்சியேயாகும் . அத்துடன் ஒரு நாட்டின் கல்வி சார் , வாளிபர் சார் முன்னேற்றத்துக்கும் அபிவிருத்திக்கும் அந்நாட்டின் கல்வித்திட்டமும் அரசியல் முகாமைத்துவமும் தூண்டுகோலாக அமைந்தால் தான் வளமான எதிர்காலத்துக்கான தரமான அத்திவாரங்களை நிர்மாணித்துக் கொள்ளலாம் .
அத்துடன் இளமை சந்ததியினரின் சகல அம்சங்களிலும் பெற்றோரின் பங்களிப்பு அவசியமானது . குழந்தை வித்துக்களின் அடிப்படை வாழ்க்கை அத்திவாரம் தாயின் மாடியிலிருந்து தான் ஆரம்பிக்கின்றது . அன்று முதல் வளர்ந்து படித்து , பருவமடைந்து இல்லறவாழ்க்கையில் ஈடுபடும் வரை பெற்றோரின் கண்காணிப்பு மிகமிக அவசியமாகின்றது , அத்துடன் இளம்சந்ததியினருக்கு அறநெறியும் முறையாகப் புகட்டப் படவேண்டும் .
ஒரு நாட்டின் அல்லது ஒரு சமுதாயத்தின் விலைமதிக்கமுடியாத வலுவுள்ள வளம் வாலிப சமூகமாகும் . இந்த வாளிப சமூகம் உருப்படியாக அமைந்தால் தான் ஒரு நாட்டின் இயற்கைவளங்களையும் செயற்கை வளங்களையும் முறையாக பிரயோகித்து கல்வி , அரசியல் , பொருளாதாரம் முதலான சகல துறைகளிலும் முன்னேறி வெற்றி கண்டு அபிவிருத்தியும் தன்னிறைவும் காண முடியும் . அன்றி இந்த வாளிப சமூகமானது முறைகேடாகி முகமைத்துவமிழந்து போதை வஸ்து , பயங்கரவாதம் , நாஸ்திகம் , போன்ற துறைகளை உள்வாங்கிக்கொள்ளுமாயின் நாட்டின் இறைமையும்ம் , அரசியலும் , பொருளாதாரமும் சீர்கெட்டு வறுமை கோட்டின் கீழ் பின்னோக்கிச்செல்லும் .
எனவே வாளிபர்கலாகிய நாம் மூளையை – பகுத்தறிவை முறையாகவும் நேர்மையாகவும் பிரயோகித்து திட்டமிட்டு செயல்பட்டு நமக்கும் நாட்டுக்கும் நல்லதையே புரிவோமாக நாளை நம்முடையது , இன்றைய வித்துக்கள் நாளைய முத்துக்கள் . உள்ள யௌவன சமூகம் இன்றியமையாததாகும் .
பிள்ளைகள் அழகிய முல்லைகள் ……….
சிறுவர்கள் சீர் சேர்க்கும் தேன்கள்………
வாளிபர்கள் ஒளிரும் வான் நிலாக்கள் ….


Comments[ 0 ]
Post a Comment