இளைஞர் நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வு இன்று 21 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இந்த அமர்வு நாளை 22ஆம் திகதி வரை நடைபெறும். மஹரகமயில் உள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றலேயே இந்த அமர்வு நடைபெறவுள்ளது.
இதன் முதல் அமர்வை இளைஞர் அலுவல்கள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்துவைப்பார்.
'இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் நல்லாட்சிமுறைஇ தரமான கல்விஇ
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்இ தேசிய முன்னேற்ற
திட்டங்களில் இளைஞர்களை இணைத்துக்கொள்ளல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில்
முக்கியமாக விவாதிக்கவுள்ளனர்'
இளைஞர் நாடாளுமன்றம் 421 உறுப்பினர்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
Comments[ 0 ]
Post a Comment