தொழில்நுட்ப வளர்ச்சி நம் அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்துவிட்டது.
இன்று இன்டர்நெட் மூலம் நாம் பல விடயங்களை தெரிந்து கொள்கிறோம்.
கல்லூரிக்கு போகாமல் ஒன்லைனிலே படித்து பட்டதாரி ஆகும் கலாச்சாரமும்
அதிகரித்துவிட்டது.
ஒன்லைன் மூலம்
பல தரப்பட்ட விடயங்களை நாம் கற்றுக்கொள்ள முடிகிறது.
பல விடயங்களை நாம் கற்றுக்கொள்வதற்க்கு இதில் பணம் செலவு செய்ய வேண்டி
இருக்கும்.
ஒரு சில விடயங்களை நீங்கள் ஒன்லைனில் இலவசமாகவும் கற்றுக்கொள்ளலாம் அவைகள் பெரும்பாலோனோருக்கு தெரிவதில்லை.
* நீங்கள் போட்டோகிராபியில் அதிகம் ஈடுபாடு கொண்டவர்களா அதை பற்றி அடிப்படையில் இருந்து தெளிவாக கற்றுக்கொள்ள ஆசை படுகிறீர்களா
www.photo.net என்ற இணையதளத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.
போட்டோகிராபியில் இன்னும் பல புதுமைகளை தெரிந்துக்கொள்ள
www.deepreview.com மற்றும் photography tutorials போன்றவைகளை பயன்படுத்தலாம்.
* நீங்கள் கம்ப்யூட்டர் புரோகிராமிங்கை பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால்
www.codecademy.com என்ற இணையதளம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம்.
* எதாவது ஒரு மொழியை கற்றுக்கொள்ள விரும்புவர்கள்
www.opencultre.com இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம்.
* உங்களின் பாதுகாப்புக்காக தற்காப்பு கலையையும் நீங்கள் ஆன்லைன் மூலம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம். அதற்க்கு நீங்கள்
www.lifehacker.com இணையதளத்தை பயன்படுத்தலாம்.
* நீங்கள் நடனத்தில் அதிகம் ஆர்வம் உள்ளவர்கள் என்றால்
www.dancetothis.com மூலம் அதை கற்றுக்கொள்ளலாம்.
Comments[ 0 ]
Post a Comment