
1760: ரஷ்ய படைகள் பேர்லின் நகரை கைப்பற்றின.
1799: 240 பேருடன் எச்.எம்.எஸ். லட்டின் கப்பல் கடலில் மூழ்கியது.
1806: பிரான்ஸுக்கு எதிராக பிரஷ்யா யுத்தப் பிரகடனம்.
1812: அமெரிக்கப் படையினரால் இரு பிரித்தானிய கப்பல்கள் கைப்பற்றப்பட்டன.
1824: கொஸ்டாரிக்காவில் அடிமைமுறை ஒழிக்கப்பட்டது.
1911: சீனாவின் ஹான்காவ் நகரில் தற்செயலாக வெடித்த குண்டொன்று சீனாவின் கிங் வம்ச ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வழிவகுத்தது.
1934: யூகோஸ்லாவிய மன்னர் அலெக்ஸாண்டர் -1 பிரான்ஸின் மார்செய்லே நகரில் வைத்து படுகொலைசெய்யப்பட்டார்.
1941: ஜேர்மன் விமானங்கள் இரவு நேரத்தில் லண்டன் நகரம் மீது குண்டுத்தாக்குதல் நடத்தின.
1962: உகண்டா சுதந்திரம் பெற்றது.
1963: இத்தாலியில் ஏற்பட்ட மண்சரிவில் 2000 பேர் பலி.
1967: பொலிவிய படையினரால் மார்க்ஷிச புரட்சியாளர் சே குவேரா கைது செய்யப்பட்டதற்கு மறுநாள் சுட்டுக்கொல்லப்பட்டார்.
1983: தென்கொரிய ஜனாதிபதி சுன் டூ ஹ்வானை பர்மாவில் வைத்து
குண்டுத்தாக்குதல் மூலம் படுகொலை செய்ய முயற்சி. இதில் ஜனாதிபதி ஹ்வான்
தப்பினார். எனினும் 22 பேர் கொல்லப்பட்டனர்.
Comments[ 0 ]
Post a Comment