பாடசாலையில் மாணவன் மீது கடும் தாக்குதல்; பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி
Thursday, August 8, 2013
பல்கலைக்கழக பகிடிவதைக்கு இன்று
பாரிய அளவில் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. இதனால் பலரும்
பாதிக்கப்பட்டுவருகிறார். இதனை சமாளிக்க உயர்கல்வி அமைச்சு
பெரும் சவால்களை எதிர்கொள்கிறது.
 |
| zacki latheef |
இந்த சூழ்நிலையில், பாடசாலை
மாணவர்களிடத்திலும் பகிடிவதை எனும் நோய் தீவிரமாக பரவி
வருகிறது. இது ஒரு ஆரோக்கியமான கல்விச் சூழலுக்கு அறிகுறியல்ல .
இவ்வாறான சம்பவங்கள் பாடசாலையினதும் சமூகத்தினதும்
நற்பெயருக்கு கலங்கத்தையே ஏற்படுத்தும்
இதனை தற்போது நமக்கு கிடைக்கப்பெறும்
சம்பவமொன்று உணர்த்துகின்றது. அத்தகைதொரு தகவல் எங்களுக்கு
அறியக்கிடைத்திருந்தது.
குருணாகல் பரகஹதெனிய தேசிய
பாடசாலையில் உயர்தரம் வர்த்தகப்பிரிவில் கல்வி பயிலும் எம்.டீ.எம்.
சகி லத்தீப் என்ற மாணவன் அதே வகுப்பை சேர்ந்த இன்னும் சில மாணவர்களால்
மோசமாக தாக்கப்பட்டுள்ளார்
கடந்த புதன்கிழமை (05.06.2013) அன்று
இடம்பெற்ற இந்த சம்பவத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள குறித்த
மாணவன் தற்போது குருணாகல் பெரிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று
வருகிறார்.
விரிவாக அறிய அழுத்தவும்
பகிடிவதைக்கும் பலிவாங்களும்
மாணவர்களிடமிருந்து கலைக்கப்பட வேண்டிய ஒரு விடயமாக
இருக்கின்றது. சகி லத்தீபின் நிலைமை எந்த பாடசாலைகளிலும் எந்தவொரு
மாணவர்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாதென்பதே எல்லோரினதும் அவாவாகும்.
Tags:
news
Comments[ 0 ]
Post a Comment