
விண்வெளியில்
எச்.டீ 40307 நட்சத்திரத்தை சூழ அமைந்துள்ள 3 கிரகங்களைக் கண்டுபிடித்ததாக
அறிவித்த விஞ்ஞானிகள், தற்போது மற்றுமொரு கிரகத்தையும் கண்டுபிடித்ததாக
அறிவித்து விடுத்துள்ளனர்.
பூமியை விட ஏழு மடங்கு பெரிய இந்த கிரகம், சூரியனில் இருந்து பூமி
காணப்படும் தொலைவிலேயே அமைந்துள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பூமியில் உள்ளது போன்ற தட்பவெப்பநிலை இக்கிரகத்திலும் நிலவுவதாக
தெரிவிக்கப்படுகின்றது.
திரவ நிலையிலான தண்ணீரும், நிலையான சுற்றுச்சூழலும் உள்ளதாக
கூறப்படுகின்றது. இதனால் அங்கு உயிரினங்கள் வாழ முடியும் என
ஹெட்பேர்க்குஷயர் பல்கலைக்கழக விஞ்ஞானி மிக்கோ துயோனா தெரிவித்துள்ளார்.
மேலும், எச்.டீ 40307 நட்சத்திரத்தை சுற்றி மேலும் இரண்டு புதிய கிரகங்கள்
உள்ளதாகவும் அவை தொடர்பில் தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments[ 0 ]
Post a Comment