பொதுநலவாய இளைஞர் மாநாடு இன்று முற்பகல் ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகியுள்ளது.
பொதுநலவாய இளைஞர் மாநாடு ஹம்பாந்தோட்டை, மாகம் ருஹுணுபுர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா ஆகியோரின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகின்றது.
ஒன்பதாவது தடவையாக நடைபெறவுள்ள பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் 44 நாடுகளை
பிரதிநிதித்துவப்படுத்தி 200 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
அபிவிருத்திக்காக ஒன்றிணைவோம் என்ற தொனிப்பொருளில் இளைஞர் மாநாடு நடைபெறுகின்றது.
பொது நலவாய நாடுகள் இளைஞர் பேரவையின் கன்னி அமர்வு
இலங்கையில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
http://newsfirst.lk/tamil/node/26287
Comments[ 0 ]
Post a Comment