நீரில் மூழ்கி மூன்று சிறுவர்கள் பரிதாபமாகப் பலி
Thursday, October 17, 2013
நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களில் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கதிர்காமம் பொலிஸ் பிரிவில் செல்லக்கதிர்காமம் மாணிக்க கங்கையில் நீராடச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நேற்று (17) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் இரட்டையர்களான 7 வயதுடைய
லக்ஷான் புத்திக மற்றும் ரஸ்மி லக்ஷான் ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.
எல்பிட்டிய - கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த இவர்கள் கதிர்காமம் ஆலயத்திற்கு
வழிபாட்டிற்குச் சென்றிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, சம்பாந்துறை பொலிஸ் பிரிவில் நிந்தவூர் - அட்டப்பளம் பகுதி
ஹோட்டல் ஒன்றின் நீர்தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்த சிறுவன் நீரில்
மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த 10 வயது சிறுவனான மொஹமட் அலி அனிப் என்பரே உயிரிழந்துள்ளார்.
சடலம் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
(அத தெரண - தமிழ்)
Tags:
news
Comments[ 0 ]
Post a Comment