நேற்று (21) நடைபெற்ற வடக்கு, வடமேல்
மற்றும் மத்திய மாகாணச்சபை தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
அமோக வெற்றி இரு மாகாணச்சபைகளை கைப்பற்றியுள்ளது.
எண்பது சதவீத வாக்குகளைப் பெற்ற தமிழரசுக் கட்சி வடமாகாணச்சபையை தன்வசமாக்கிக்கொண்டது.
மத்திய மாகாணத்தில் ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணி 36 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 16 ஆசனங்களையும்
தொழிலாளர் காங்கிரஸ் 2 ஆசனங்களையும் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும்
தமதாக்கிக்கொண்டன.
வட மேல் மாகாணத்தில் ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணி 34 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 12 ஆசனங்களையும்
முஸ்லிம் காங்கிரஸ் 2 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டன.
வட மாகாணத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி
30 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களையும் முஸ்லிம்
காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டன.
Comments[ 0 ]
Post a Comment