பாகிஸ்தானில் ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி காரணமாக குறைந்தபட்சம் 208 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இந்த பூமியதிர்ச்சி காரணமாக 350 பேர் அளவில் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தென் - மேற்கு பாகிஸ்தானிலுள்ள மிகவும் பின்தங்கிய மாகாணமான பலூஸ்தானிலேயே
இந்த பூமியதிர்ச்சி நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்டுள்ளது.
இந்த பூமியதிர்ச்சி ரிக்டர் அளவுகோலில் 7.7ஆக பதிவாகியுள்ளது. பலூஸ்தான்
மாகாணத்தில் வட – கிழக்கு அவரன் பகுதியில் 66 கிலோமீற்றர் தொலைவில் 20
கிலோமீற்றர் ஆழத்தில் இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த பூமியதிர்ச்சி கராச்சி, ஹைதராபாத், இந்தியாவின் தலைநகரான புதுடில்லியிலும் உணரப்பட்டுள்ளது.
இந்த பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து குவாடர் துறைமுகத்துக்கு அப்பாலான
கரையோரப்பகுதியில் சிறிய தீவு ஒன்று தோன்றியுள்ளதாக இதனைக் கண்டவர்கள்
கூறியுள்ளனர்.
இவ்வாறு தோன்றிய சிறிய தீவை பொதுமக்கள் கூடிநின்று பார்வையிட்டதாகவும் இது 9
மீற்றர் உயரத்தையும் 100 மீற்றர் நீளத்தையும் உடையதாகக் காணப்பட்டதாக அந்த
நாட்டுப் பொலிஸார் தெரிவித்தனர்.
Comments[ 0 ]
Post a Comment