
இனித்திடும் பெருநாள்
இதயத்தில் நிறைந்து
இன்பம் தருகிறது
கனியின் சுவையாய்
மனதினில் அதனால்
களிப்பும் வருகிறது
உள்ளம் எங்கும்
மகிழ்ச்சி வெள்ளம்
ஊற்றாய்ப் பாய்கிறது
அல்லாஹ் விதித்த
கடமையைச் செய்ய
ஆவலும் கொள்கிறது
உறவுகள் சேர்ந்து
ஒன்றாய் இணையும்
பெருநாள் இதுவாகும்
சிறகுகள் கொண்டு
செகத்தினில் பறக்க
சந்தோசம் துணைபோகும்
அல்லாஹ்வை பணிந்து
அருளைப் பெருகின்ற
தினமே இன்றாகும்
வல்லவன் தந்த
பெருநாள் பண்புகள் - என்றும்
எமைச் சேரும்
தேசகீர்த்தி பி.ரி அஸீஸ்
Comments[ 0 ]
Post a Comment