சூரியனுக்கு இதழ் விரிக்கும் கமலமாய்
விடியலில் பூக்கும் ரோஜாவாய்
நறுமணத்திற்காக மலரும் மல்லிகையாய்
வாசகர்களுக்காக விடிகிறாய் விடிவெள்ளி!
விண்ணில் தாரகையாம் விடிவெள்ளி
மண்ணில் மாணிக்கமாம் விடிவெள்ளி
மக்களின் மன்னராம் விடிவெள்ளி
ஊடகங்களில் உன்னதமாம் விடிவெள்ளி!
அனைத்தையும் அழகாய் சொல்லும்
ஆசிரியர் தலைப்பு
கண்ணீர் வடிக்கச் செய்யும் காதிக்கோடு
சொல்லோவியத்தை வரையும்
ஆறாம் விரல்
சிறப்பாய் வளரும் சிறுவர் பகுதி
எல்லாம் எம்மை கவர்ந்தவையே!
விடிவெள்ளியே நீ வளம்பெற
உன்னால் நாம் ஜெயம்பெற
சிறியோரும் பெரியோரும் பலன்பெற
உனை வாழ்த்துகிறேன்!
Comments[ 0 ]
Post a Comment