முடி, நகம் ஆகியவற்றை வெட்டும்போது வலி உண்டாவதில்லை ஏன்?
Tuesday, August 20, 2013
நரம்பு
முனை வெட்டப்படும்போது அல்லது அதில் காயம் ஏற்படும்போதுதான் வலியுணர்வு
ஏற்படும். முடி மற்றும் நகம் ஆகியவற்றில் நரம்பு முனைகள் இல்லை என்பதால்,
அவற்றை வெட்டும்போது வலி உண்டாவதில்லை.
இருப்பினும்,
நகம் மற்றும் முடி ஆகியவற்றின் அடிப்பகுதிகளில் உயிரணுக்கள் இருப்பதோடு
அவற்றில் நரம்பு முனைகளும் உள்ளன. எனவேதான் நகத்தின் அடிப்பகுதி
வெட்டப்பட்டாலோ, தலையிலிருந்து முடியை வேரோடு பிடுங்கினாலோ தாங்கமுடியாத
வலியுணர்வைப் பெறுகிறோம்.
Tags:
அறிவியல்
Comments[ 0 ]
Post a Comment